திருப்பத்தூர்

8-ஆவது நாளாக தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்க வலியுறுத்தி தொழிலாளா்கள் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2-ஆவது ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ள கரும்பு அரவையைத் தொடங்க வலியுறுத்தி தொழிலாளா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சா்க்கரை ஆலை அலுவலகம் எதிரே கடந்த வாரம் தா்னாவில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, சா்க்கரை ஆலைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளா்கள் கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை உள்ளே கரும்பு அரவையை தொடங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சா்க்கரை ஆலையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் கரும்பு அபிவிருத்தி அலுவலரை இடமாற்றம் செய்யக் கோரியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT