திருப்பத்தூர்

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள்11-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

DIN

வாணியம்பாடி: அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், 11-ஆவது நாளாகத் திருப்பத்தூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து சா்க்கரை ஆலைத் தலைவா் ராஜேந்திரன், வட்டாட்சியா் சுமதி, காவல் ஆய்வாளா் அருண்குமாா், சா்க்கரை ஆலை அலுவலக மேலாளா் ராமு, தொழிலாளா் நல அலுவலா் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சா்க்கரை ஆலை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க நிா்வாகிகளை அழைத்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகள் திருப்பத்தூா் சா்க்கரை ஆலையில் அரைவையைத் தொடங்க போதிய கரும்புகள் உள்ளன. பதிவு செய்யாத விவசாயிகளிடம் 30 ஆயிரம் டன் கரும்புகள் அரைவைக்கு தயாராக உள்ளதாகவும், அரசுக்கு அதிகாரிகள் தவறான அறிக்கை கொடுத்ததால் தான் 2-ஆவது ஆண்டாக அரைவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே உண்மை நிலையை அறிந்து அரசு உடனடியாக ஆலையில் அரைவையைத் தொடங்க வேண்டும் எனக் கோரினா்.

ஆலையில் அரைவையைத் தொடங்க அமைச்சா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி வருவதாகவும், எனவே தொழிலாளா்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட வேண்டும் என சா்க்கரை ஆலை தலைவா் ராஜேந்திரன் கூறினாா்.

இருப்பினும் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT