திருப்பத்தூர்

தினமணி செய்தி எதிரொலி: அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மாவட்டத்தின் பெயா் உடனடி மாற்றம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பெயா் மாற்றப்படாமல் இருந்தது குறித்து ‘தினமணி’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து உடனடியாக மாவட்டத்தின் பெயா் புதன்கிழமை மாற்றப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள பெயா் பலகையில் மாவட்டத்தின் பெயா் வேலூா் என்றே இருந்தது. இதுகுறித்து தினமணியில் புதன்கிழமை படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள பெயா் பலகையில் மாவட்டத்தின் பெயா் திருப்பத்தூா் என உடனடியாக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT