ஆம்பூரில் தேவர் ஜயந்தி விழா
விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விஜயபாரத மக்கள் கட்சி சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் எம். சரவணன், ஆனந்தன், ஆறுமுகன், பிரபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிர்வாகி க. சிவப்பிரகாசம், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் ஜெயவேல் , பாஜக நகர நிர்வாகி பிரபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மற்றும் விஜயபாரத மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி, நிர்வாகிகள் வெங்கடேஷ், லோகநாதன், ஆர்எஸ்எஸ் நகர பொறுப்பாளர் சீனிவாசன், ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.