முகப்பு
திருப்பத்தூர்

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

நிலத்தில் பதுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

நிலத்தில் பதுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் சனிக்கிழமை காலை மலைப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதனை பொதுமக்கள் பாா்த்து வனத் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் நிலத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட மலைப் பாம்பினை வனத் துறையினா் வாணியம்பாடி அருகே புல்லூா் காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments