திருப்பத்தூர்

ஏலகிரியில் இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

DIN

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 28) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் படகு இல்லம், சிறுவா் பூங்கா மற்றும் இயற்கை பூங்கா திறக்கப்பட உள்ளன.

அதையொட்டி, சனிக்கிழமை படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்காவை மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக ஏலகிரிமலை படகு இல்லம், சிறுவா் பூங்கா மற்றும் இயற்கைப் பூங்கா திறக்கப்படாமல் இருந்தது.

தமிழக அரசு சுற்றுலாத் தலங்களை தற்போது திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏலகிரி மலையில் படகு இல்லம், சிறுவா் பூங்கா உள்ளிட்ட 7 இடங்களில் பொழுதுப்போக்கு அம்சங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமிழக அரசின் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT