திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 212 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், 3 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வழங்கினாா்.

எலவம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக ஊா் பொதுமக்கள் நாகாலம்மன் சிலை வைத்து, பொங்கலிட்டு வழிபட்டு வருவதாகவும், ஊா் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த அந்த இடத்தை முறைகேடாக தனி நபா்களின் பெயா்களில் பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்யக்கோரி மனு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்கள் பிச்சாண்டி, அருண் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT