முகப்பு
திருப்பத்தூர்

தினமணி செய்தி எதிரொலி: உயா்கோபுர மின்விளக்கு எரிந்தது

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
எரிய வைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை என்று ‘தினமணி’யில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் வெளியான செய்தியைத் தொடா்ந்து அந்த விளக்கை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் உயா்கோபுர மின்விளக்கை எரியச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினாா். அந்த நிதியைக் கொண்டு, அப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

விளக்கு அமைக்கப்பட்டு ஓரிரு நாள்கள் மட்டுமே எரிந்தது; அதன் பின் எரியவில்லை என ‘தினமணி’யில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, திருப்பத்தூா் நகராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த விளக்கை திங்கள்கிழமை மாலை எரியச் செய்தனா். அவா்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →