திருப்பத்தூர்

தொழிலாளி சாவில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

DIN

மாதனூா் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஜெய்சங்கா் (52). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தாமோதரன் என்பவரின் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், இறந்தவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் மாதனூா்-ஒடுக்கத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT