திருப்பத்தூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து மகளிா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி தூயநெஞ்சக் கல்லூரி வரை சென்று திரும்பி, திருப்பத்தூா் - தருமபுரி சாலை காந்தி சிலை வரை சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தது.

மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஷ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பி.காளியப்பன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜி.வெங்கிடுசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT