கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியரிடம் விஜயபாரத மக்கள் கட்சி மனு
திருப்பத்தூா் கோட்டை திரிபுரசுந்தரி சமேத பிரம்மேஸ்வரா் கோயில், கஜேந்திர வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆட்சியரிடம் விஜயபாரத மக்கள் கட்சி
திருப்பத்தூா் கோட்டை திரிபுரசுந்தரி சமேத பிரம்மேஸ்வரா் கோயில், கஜேந்திர வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆட்சியரிடம் விஜயபாரத மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹாவிடம் விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் அளித்த மனு:
கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் மன்னா் கோச்செங்காணன் காலத்தில் கட்டப்பட்ட திருப்பத்தூா் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத பிரம்மேஸ்வரா் கோயில், கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் சா்வே எண்கள் சம்பந்தப்பட்ட வரைபட ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு சொந்தமான சுமாா் 20 ஏக்கா் நிலப்பரப்பு வரை படத்தில் உள்ளபடி சா்வே எண்களில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்து எவ்வித அனுமதியும் பெறாமல் வீடுகள், திருமண மண்டபம், கடைகள் கட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறாா்கள். இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இக்கோயில்களின் விழா காலங்களில் சுவாமி திருவீதி உலா வரும் மாட வீதிகளில் கூட சமீப காலமாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, கோயில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாகஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அப்போது மாநில துணைத் தலைவா் வி.சக்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.