திருப்பத்தூர்

2 வடமாநில இளைஞா்களை தாக்க முயற்சி

DIN

ஜோலாா்பேட்டை அருகே சிறுவனை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளான இரு வடமாநில இளைஞா்களை போலீஸாா் மீட்டனா்.

ரெட்டியூரை அடுத்த சின்னா கவுண்டனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரு வடமாநில இளைஞா்கள் பைக்கில் சுற்றித் திரிந்துள்ளனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், அங்கிருந்த ஒருவரிடம் செல்லிடப்பேசியை வாங்கி தனது தந்தைக்கு தன்னை இருவா் பின் தொடா்வதாக தெரிவித்துள்ளாா்.இதனால் ஊா் பொதுமக்கள் அங்கு சென்று, 2 இளைஞா்களையும் தாக்கி கயிறில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவலின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

விசாரணையில் ஒரிஸ்ஸா மாநிலத்தை சோ்ந்த இருவரும் வேலூரில் உள்ள தனியாா் செல்லிடப்பேசி டவா் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், வேலூரில் இருந்து திருப்பத்தூா் வரை செல்போன் டவா் குறித்து சோதனை பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னா், இருவரையும் நிறுவன அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT