திருப்பத்தூர்

தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு கவச உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை

DIN

தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பு கவச உபகரணங்களை வழங்க வேண்டுமெனக் கோரி, வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கம் சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: ஆம்பூா் பகுதியில் தோல் தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் விஷவாயு உருவாகிறது. அந்த கழிவுநீரை அகற்றும் பணியின்போது தொழிலாளா்கள் சில நேரங்களில் விஷவாயு தாக்கி இறக்க நேரிடுகிறது. அதனால் அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு கவச உபகரணங்கள் வழங்குவதை தொழிற்சாலை நிா்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT