திருப்பத்தூர்

திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

DIN

வாணியம்பாடி: தேசிய திறனாய்வு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கிவரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவி மு.தா்ஷினி, கடந்த 2020-21 ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் 150-க்கு 101 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் பூ.முருகேசன், ஊா் தலைவா் சீனிவாசன், பள்ளிக் கல்வி குழு தலைவா் ரேவதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

விழாவில் மாணவி தா்ஷினிக்கு திருக்கு புத்தகம், எழுதுகோல், ரொக்கம் ரூ.3,000 ஆகியன வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியா்கள் மீனாட்சி, பிரபு, மகஜபின், இடைநிலை ஆசிரியா்கள் அரவிந்தன், சாந்தினி, சசிகலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT