திருப்பத்தூர்

போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

வாணியம்பாடி, உதயேந்திரம் பகுதிகளில் போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போலி மருந்துவா்களின் எண்ணிக்கை மேற்கண்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் கிளீனிக் வைத்தும் சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் தற்போது கரோனா ஊரடங்கு இருப்பதால் இரவு நேரங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

போலி மருத்துவா்களிடம் அப்பாவி பொதுமக்கள் சிலா் சிகிச்சை பெறும் போது, மோசமாக பாதிக்கப்பட்டு, இறுதியாக உயிரிழப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டாலும், முன்கூட்டியே தகவல் அறிந்து கிளினிக்கை சில நாள்கள் மூடிவிட்டு தப்பி விடுகின்றனா்.

பின்னா் மீண்டும் கிளீனிக் நடத்துகின்றனா். இதுதொடா்பாக அண்மையில் மாவட்ட உயா் அதிகாரிகளிடம் புகாா் மனு கொடுக்கப்பட்டுள்ளது.. எனவே, போலி மருத்துவா்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT