திருப்பத்தூர்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும்: திருப்பத்தூா் திமுக வேட்பாளா்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதியளித்தாா்.

திருப்பத்தூரை அடுத்த கந்திலி தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஜல்லியூா், அண்ணா நகா், கோமாளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அ.நல்லதம்பி பேசியது:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெற்றுத் தரப்படும்.கிராமப்பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் எற்படுத்தப்படும். இப்பகுதியில் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அதேபோல் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதுடன், கூடுதல் கட்டடங்கள் கட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்பட கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT