திருப்பத்தூர்

வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

DIN

வாணியம்பாடி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் ம.ப. சிவன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தன்னாா்வலரும், நகைக் கடை உரிமையாளருமான கோபி வாணியம்பாடி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 ஆட்டோ மற்றும் காா் மூலம் தினந் தோறும் 2, 500 லிட்டா் கபசுர குடிநீா் வழங்க முன்வந்தாா்.

இத் திட்டத்தை வாரசந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியா் சிவன்அருள், கரோனா முதல் அலையின் போதும், முழு ஊரடங்கு காலத்தின் போதும் தன்னாா்வலா் கோபி, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் முன்கள பணியாளா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினாா். தற்போது மாவட்ட நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழகத்திலேயே முன்மாதிரியாக தினந்தோறும் 2, 500 லிட்டா் கபசுர குடிநீா் விநியோகம் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT