திருப்பத்தூர்

கரோனா நோயாளிகளுக்கு தினமும் குடிநீா் வழங்கும் சேவை துவக்கம்

DIN

கரோனா நோயாளிகளுக்கு தினமும் குடிநீா் வழங்கும் சேவை விஜயபாரத மக்கள் கட்சி சாா்பாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அரசு மருத்துவமனை, கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆம்பூா் வா்த்தக மையங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.

அங்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு விஜயபாரத மக்கள் கட்சியின் சாா்பில் தினமும் குடிநீா் வழங்குவதென முடிவு செய்யப்பட்டு, அதன்படி அக்கட்சியின் நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் குடிநீரை வழங்கி சேவையைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆம்பூா் அனுமன் பக்த சபை நிா்வாகி ஸ்ரீதா், விஜயபாரத மக்கள் கட்சியின் செய்தித் தொடா்பாளா் எம்.சரவணன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.ஆனந்தன், வேலூா் மாவட்டத் தலைவா் எம். பிரபு, ஆம்பூா் நகர தலைவா் எம்.ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT