முகப்பு
திருப்பத்தூர்

கபசுர குடிநீா் காய்ச்சும் பணி: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் காய்ச்சும் பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

Updated On : 29 மே, 2021 at 11:59 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் காய்ச்சும் பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் காய்ச்சப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கும் கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. இப்பணியில் சத்துணவு அமைப்பாளா்கள், சத்துணவு உதவியாளா்கள், சத்துணவு சமையலா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதற்காக நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் தினமும் காய்ச்சப்படுகிறது. அப்பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்சிஇ.தங்கையா பாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா்.

நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.