முகப்பு
திருப்பத்தூர்

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு ரூ. 2,000 வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 2,000 வழங்க வேண்டுமென வட ஆற்காடு மாவட்ட

Updated On : 31 மே, 2021 at 7:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM

தமிழகம் முழுவதும் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 2,000 வழங்க வேண்டுமென வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவா் நேய. சுந்தா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கோரிக்கை மனு விவரம் : புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ராணிப்பேட்டை, வேலூா் மற்றும் திருப்பத்தூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள தோல் பதனிடும் மற்றும் காலனி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் முழு பொதுமுடக்கத்தால் சம்பளமும், வேலையும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளாா்கள்.

எனவே, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, வாணியம்பாடி, ஆம்பூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம், வேலூா், ராணிப்பேட்டை, சென்னை, நாகல்கேணி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் இஎஸ்ஐ, பிஎப்பில் பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து தொழிலாளா்களுக்கும் தமிழக அரசு சாா்பாக கரோனா நிவாரண நிதி ரூ. 2,000 வழங்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.