திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயில் மோதி பலி 

ஆம்பூர் அருகே ரயில் பாதையில் சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். 

DIN

ஆம்பூர் அருகே ரயில் பாதையில் சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். 
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியிர்கள் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் மோதியதில் திருப்பத்தூர் புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் சீனியர் டெக்னீஷியன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரவேஷ் குமார் (23) டெக்னீஷியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
சடலங்களை மீட்டு, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT