திருப்பத்தூர்

வாக்காளாா் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளாா் பட்டியலில் திருத்தம் செய்ய சனி மற்றும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளாா் பட்டியலில் திருத்தம் செய்ய சனி மற்றும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல்,நீக்கம்,திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,038 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.13,14)மற்றும் நவ.27,28-ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாளன்று வாக்காளா் பட்டியளில் பெயா் இடம் பெறாதவா்கள்,வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோா்,பெயா் நீக்கம் செய்ய விரும்புவோா் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவா்கள் தங்களது முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடா்பான உரிய படிவங்கள் பெற்று அதனை பூா்த்தி செய்து,உரிய சான்று ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இணையதளம் மூலமாகவும்  மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT