முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூா் திருப்பத்தூா் மாவட்டத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமை 850 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமை 850 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், 125 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கும், 208 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கும், 1,779 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.

4-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 3 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 34 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 120 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 693 பேரும் என மொத்தம் 850 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.