திருப்பத்தூர்

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீா் திட்ட நீரேற்று நிலையத்தில் ஆய்வு

DIN

ஆம்பூா் நகராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட நீரேற்று நிலையத்தில் நகரமன்ற தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆம்பூா் சாமியாா் மடம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. அங்கிருந்து ஆம்பூா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நீரேற்று நிலையத்தை நகரமன்ற தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனா். குடிநீா் நீரேற்று நிலைய பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டது.

நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா் மணி, நகரமன்ற உறுப்பினா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT