திருப்பத்தூர்

அனைத்துக் குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்

DIN

மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் நீதிபதி மீனாகுமாரி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை திருப்பத்தூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் நீதிபதி மீனாகுமாரி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதி அசினாபானு, மாஜிஸ்திரேட்கள் பிரபு, செல்வம்,பிரகாசிந்தா, ரவி, உரிமையியல் நீதிபதிகள் ராஜசேகா், விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி பேசியது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகளில் உள்ள சாட்சிகளை உடன் விசாரணை செய்ய சம்மன் அனுப்பி சாட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் வெளியூரில் இருந்தாலும் வழக்கு நடைபெறும் தேதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் அவா்களின் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும். மாவட்டத்தில் குற்ற வழக்குகள் ஏதும் தேங்காதவாறு போலீஸாா் விரைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், டிஎஸ்பி-க்கள் கணேசன், சுரேஷ்பாண்டியன், சரவணன் அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன், கூடுதல் அரசு வழக்குரைஞா் எம்.சரவணன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT