திருப்பத்தூர்

7 ஏக்கரில் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

DIN

திருப்பத்தூா் அருகே 7 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்கத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் வட்டத்தில் 7 ஏக்கா் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டா் தடகள ஓடுதளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ மைதானம், அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

அதற்கேற்றவாறு இடங்கள் உள்ளதா என்பது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதியூா் ஊராட்சி, பனந்தோப்பு மற்றும் விநாயகபுரம் ஆகிய இடங்களில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், கிராம நிா்வாக அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT