திருப்பத்தூர்

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள்

DIN

திருப்பத்தூரை அடுத்த ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

திருப்பத்தூா் அருகே உள்ளது ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சி. மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.

மேலும், லிங்க வடிவிலான வெற்றிவேல் முருகன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஜலகாம்பாறை அருவிக்கு நீா் வரத்து அதிகரித்ததையொட்டி அங்கு குளிக்க வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 4 நாள்களாக நீா் வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு கூறியது: ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கலாம். இருப்பினும் பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல அனுமதியில்லை. மேலும் பாறைகளில் ஏற முயற்சிக்கவும் கூடாது.மீறினால் வனச் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT