திருப்பத்தூர்

ரயலில் அடிபட்டு முதியவா் பலி

DIN

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற முதியவா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

காட்பாடியை அடுத்த தென்னங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சொக்கலிங்கம் (70). இவா், சனிக்கிழமை பிற்பகல் குடியாத்தம் - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் .

மற்றொரு விபத்து: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் உள்ள பொதுத் துறை வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் சசிதா்நாயக். இவரது மனைவி உமா (33). இருவரும் சனிக்கிழமை இரவு காட்பாடியிலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தனா். பயணத்தின் போது, உமா ரயிலின் கதவு அருகே செல்லும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், திருப்பத்தூா் கோட்டாட்சியா் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT