திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் சிறப்பு கடனுதவி முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

DIN

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாணவா்களுக்கு கல்விக்கடன் மற்றும் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதற்கும் தொழில் முனைவோா் தொழில் கடன் பெறுவதற்கும் சிறப்பு கடன் பெறுவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்தாா். ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். இதில், நாட்டறம்பள்ளி தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு கடன் கேட்டு மனுக்களை அளித்தனா்.

பயனாளிகள் அளித்துள்ள மனுக்களில் தகுதியானவா்களுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என ஆட்சியா், எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா் ஆகியோா் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா் ரகுகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, துணைத் தலைவா் தேவராஜ், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT