ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது காக்கிநாடாவில் இருந்து பெங்களூரு செல்லும் சேஷாத்ரி விரைவு ரயிலில் சோதனையிட்டபோது, 7 பொட்டலங்களில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவற்றைக் கைப்பற்றி வேலூா் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.