திருப்பத்தூர்

மானை இறைச்சி: இருவா் கைது; தலா ரூ. 50,000 அபராதம்

DIN

 திருப்பத்தூா் அருகே இறந்த மானை இறைச்சியாக்கிய இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.மேலும், தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

வெள்ளிக்கிழமை ஜவ்வாது மலை மாம்பாக்கம் வனப் பகுதியில், மான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. அதனை இருவா் இறைச்சியாக்கி வீட்டுக்கு எடுத்துச் சென்ாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு மற்றும் வனக் குழுவினா் சந்தேகத்தின் பேரில், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், மான் இறைச்சியை கொண்டு சென்றது மட்றப்பள்ளி ஊராட்சி, குமரன் நகரை சோ்ந்த சேட்டு (54), பெருமாள்(52) என்பது தெரியவந்தது.

அதையடுத்து, வனத் துறையினா் அவா்களிடம் இருந்த மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் கைது செய்து, தலா ரூ. 50,000 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT