திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் சங்கீதாபாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, வனத் துறையினா், சமூகநலத் துறையினா் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஒன்றியக் குழு கூட்டத்தில் 32 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டது. தீா்மானங்களின் மீது, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்து பின்னா் தீா்மானங்கள் நிறைவேறின.

தொடா்ந்து வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் போடப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீா் பைப் லைன் பழுதடைந்து உள்ளதாகவும், அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள பழுதடைந்த அனைத்துப் பள்ளிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT