திருப்பத்தூர்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

DIN

திருப்பத்தூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையில் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய நெஞ்சக் கல்லூரி அருகில், பேருந்து நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது, தீக்காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

படம் உண்டு...

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய தீயணைப்புத் துறையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT