திருப்பத்தூர்

உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய கடைகளில் விற்பனைக்குத் தடை

DIN

 திருப்பத்தூா் மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 கடைகளில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 14 நாள்கள் முதல் 21 நாள்கள் வரை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கக்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனா்.

விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு உரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனுமதியின்றி வெளி மாவட்டங்களுக்கு உரங்களை விற்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உரங்களைப் பதுக்கி, தட்டுப்பட்டை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT