பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் ரயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா். 
திருப்பத்தூர்

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்

DIN

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை ஹாட்டியா ரயில் நிலையத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மாண்டியா வரை செல்லும் ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரயிலில் சந்தேகத்தின்பேரில் இளைஞரின் பையை சோதனை செய்தனா். அதில்,இரு பண்டல்களில் சுமாா் 18 கிலோ கஞ்சா இருந்து.

பின்னா், இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் , மாண்டியா பகுதியைச் சோ்ந்த சுமந்த் (21) என்பது தெரிய வந்தது. அதையடுத்து சுமந்த் மீது, வழக்கு பதிந்து, அவரிடமிருந்த 18 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT