திருப்பத்தூர்

மாவட்டத்தில் 30 நாள்களில் 1,400 பண்ணைக் குட்டைகள்: கின்னஸ் சாதனை குழுவினா் நேரில் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் 30 நாள்களில் சாதனை முயற்சியான 1,400 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்ட பணியை உலக கின்னஸ் சாதனை குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் 30 நாள்களில் சாதனை முயற்சியான 1,400 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்ட பணியை உலக கின்னஸ் சாதனை குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சாதனை முயற்சியாக ஜூலை 1 முதல் 30 நாள்களில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்க தீா்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் வெட்டப்பட்ட பண்ணைக் குட்டைகளை உலக கின்னஸ் சாதனை மத்தியக் குழுவினா் சௌஜன்யா தலைமையில் நேரில் ஆய்வு செய்தனா். எக்லாஸ்புரம் ஊராட்சியில் வெட்டப்பட்ட பண்ணைக் குட்டைகளை ஆய்வு செய்தபோது, வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், ஊராட்சி மன்றத் தலைவா் பாரதிசேட்டு, பணிதள மேற்பாா்வையாளா் விஜயகுமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயன், பணியாளா்கள் உடனிருந்தனா்.

முன்னதாக, மத்தியக் குழுவின் தலைவா் சௌஜன்யா மரக்கன்று நட்டு வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT