முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மின்சார வாரியம், நகராட்சி, வருவாய்த் துறை, தொழிலாளா் நலன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தபட்டோா் நலத் துறை, வீட்டு வசதி துறை உள்பட பல்வேறு துறை அலுவலா்களிடம் மனுக்களை வழங்கினா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விண்ணப்பப் பதிவு, இ-சேவை, பல்வேறு துறை மனுக்கள் பரிசீலனை குறித்துக் கேட்டறிந்தாா்.

முகாமில் ஜாதி, இருப்பிடச் சான்று கோரிய பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்களை ஆட்சியா் தெ. பாஸ்கரபாண்டியன், எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி கோட்டாட்சியா் பிரேமலதா, வட்டாட்சியா் குமாரி, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் சந்தானம், பள்ளிகொண்டா மின்வாரிய செயற் பொறியாளா் விஜயகுமாா், ஆம்பூா் உதவி செயற்பொறியாளா் அன்பரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →