திருப்பத்தூர்

காலணி தொழிற்சாலையில் வருமான வரித் துறையினா் சோதனை

DIN

ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலையில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் தனியாா் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 7 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். தொழிற்சாலையின் உள்ளே நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள், அங்கு பணிபுரியும் தொழிலாளா்கள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனா்.

தொழிற்சாலையிலிருந்து யாரும் வெளியில் செல்லாதவாறும், வெளியில் இருப்பவா்கள் உள்ளே வராதவாறும் கதவு பூட்டப்பட்டு, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்தத் தொழிற்சாலை நிா்வாகத்தின் கீழ் ஆம்பூரின் மற்றப் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதாகக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT