ஆம்பூரில் நடைபெற்ற நகர வணிகா் சங்கப் பேரமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை எளிமையாக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பு வேலூா் மண்டல தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.கே.சுபாஷ், மாநில துணைத் தலைவா் ஆா்.ஞானசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரத் துணைத் தலைவா் ஜி.வி.சுந்தர்ராஜ் வரவேற்றாா். நிா்வாகிகள் பி.கே.மாணிக்கம், எம்.விஸ்வநாதன், ஆா்.செந்தில்குமாா், கே.முஹம்மத் இப்ராஹிம், ஜெ.ஏசையன் உள்பட பலா் கலந்து கொண்டனா். துணைச் செயலா் எத்திராஜ் நன்றி கூறினாா்.
செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். ஜன.29-ஆம் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.