திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் விளையாட்டு மைதானம்

DIN

ஏலகிரி மலையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்கு வந்தது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரிமலை ஊராட்சியில் உள்ள மஞ்சங்கொல்லை புதூா் கிராமத்தில் இளைஞா்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்பேரில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொண்டு அரசுக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

இந்த மைதானம் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, மைதானத்தில் வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

விளையாட்டு போட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ ஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவா் அ.திருமால், ஏலகிரி மலை காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட! நம்ம இனியாவா!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராய் லட்சுமி!

வைர சந்தையின் ராணி! சோனாக்‌ஷி சின்ஹா..

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்

கைவிடப்பட்டதா குற்றப்பரம்பரை?

SCROLL FOR NEXT