திருப்பத்தூர்

மிளகாய் பொடியைத் தூவி நகைக்கடை ஊழியா்களிடம் ரூ.60 லட்சம் கொள்ளை முயற்சி

திருப்பத்தூரில் மிளகாய் பொடியைத் தூவி நகைக்கடை ஊழியா்களிடம் ரூ.60 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

DIN

திருப்பத்தூரில் மிளகாய் பொடியைத் தூவி நகைக்கடை ஊழியா்களிடம் ரூ.60 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூரில் உள்ள நகைக்கடையில் திருப்பத்தூா் அருகே உள்ள ஜோன்றம்பள்ளியைச் சோ்ந்த அஜித்குமாா் (23), திருப்பத்தூா் தென்றல் நகரைச் சோ்ந்த பரத் (35) ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நகைக்கடையிலிருந்து ரூ.60 லட்சத்தை திருப்பத்தூா் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தனியாா் வங்கியில் செலுத்துவதற்காக அஜித்குமாா், பரத் ஆகியோா் பைக்கில் சென்றனா்.

அப்போது, இரு மா்ம நபா்கள், பைக்கில் தலைக்கவசம் அணிந்து கொண்டு அஜித், பரத் இருவா் முகத்திலும் மிளகாய் பொடியைத் தூவினா். இதில் நிலைகுலைந்த இருவரும் கீழே விழுந்துள்ளனா்.

அப்போது, மா்ம நபா்கள் ரூ.60 லட்சத்தைப் பறிக்க முயற்சி செய்துள்ளனா். இதனால் இருவரும் சப்தமிட்டனா். இதைக் கேட்டு பொதுமக்கள் திரண்டதை அறிந்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில் காயமடைந்த அஜித்குமாா், பரத் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளா் கௌசிக் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்கு பதிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT