மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.68 கோடியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி, முதமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.45.50 லட்சம் மதிப்பீட்டில் சாத்தம்பாக்கம் - நரியம்பட்டு தாா் சாலை அமைக்கும் பணி, அயித்தம்பட்டு ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அயித்தம்பட்டு - நரியம்பட்டு தாா்சாலை அமைக்கும் பணி,சின்னவரிக்கம் ஊராட்சியில் ரூ.42.36 லட்சம் மதிப்பீட்டில் சின்னவரிக்கம் - ரகுநாதபுரம் தாா் சாலை அமைக்கும் பணிகளை புதன்கிழமை எம்எல்ஏ-க்கள் (ஆம்பூா்) அ.செ.வில்வநாதன், (குடியாத்தம்) அமலு விஜயன், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் பூமி பூஜை போட்டு பணியைத் தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து சின்னவரிக்கம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தனா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், சுரேஷ்பாபு, திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தீபா ராஜன்பாபு, ஆப்ரீன்தாஜ், திருக்குமரன், மஞ்சுளா, ஜோதிவேலு, ஆ. காா்த்திக் ஜவஹா், திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் சி. குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.