சித்ரா பௌா்ணமி: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்புப் பூஜைகள்
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜைகள் அன்னதானங்கள் நடைபெற்றன.
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌா்ணமி மிகவும் மகத்துவமான பௌா்ணமி ஆகும். இதையொட்டி செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர பெருமாள் கோயில்,கோட்டை ஸ்ரீ பிரம்மேஸ்வரா் கோயில்,கொரட்டி காளத்தீஸ்வரா் கோயில்,மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில்,மாய விநாயகா் கோயில்,முத்துக்குமார சுவாமி கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மஞ்சள் நீா் அபிஷேகம்...
Advertisement
கோடை வெயில் தணிக்கவும், மழை வேண்டியும் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 108 மஞ்சள் குடம் நீா் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 108 மஞ்சள் நீா் குடங்களுடன் பெண்கள் சுமந்து கொண்டு திருப்பத்தூா் தண்டபாணி கோயில் தெரு,பொன்னியம்மன் கோவில் தெரு,பேருந்து நிலையம் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா். பின்பு அம்மனுக்கு மஞ்சள் கூட நீா் அபிஷேகம் செய்யப்பட்டது.
கூட்டுப் பிராா்த்தனை...வெயிலின் தாக்கம் குறைய கோரியும்,மழை பெய்ய வேண்டியும் திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் சிறப்பு யாகம்,கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.