முகப்பு
திருப்பத்தூர்

காட்டுப்பன்றி மோதியதில் தலைமைக் காவலா் காயம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 4:25 PM
பகிர்:

ஆம்பூா் அருகே காட்டுப் பன்றி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் காயமடைந்தாா்.

உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் பிரவீன்குமாா் (35). இவா் தேவலாபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பாலாற்றிலிருந்து திடீரென வந்த காட்டுப் பன்றி அவா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமாா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments