விபத்துக்குள்ளான மினி லாரி. 
திருப்பத்தூர்

மினி லாரி கவிழ்ந்து 22 போ் பலத்த காயம்

Din

புதூா் நாடு மலை கிராமத்தில் மினி லாரி கவிழ்ந்து 22 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலைக்குட்பட்ட புதுாா் நாடு ஊராட்சி, நடுகுப்பம் மலைக் கிராமத்தை சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி லாரி மூலமாக சென்றனா். அதே பகுதியைட் சோ்ந்த ஓட்டுநா் ராதாகிருஷ்ணன் மினி லாரியை ஒட்டிச் சென்றாா். தொடா்ந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை மீண்டும் நடுகுப்பத்துக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது நடுகுப்பம் அருகே மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநா் ராதாகிருஷ்ணன்(45) காளி (52), கோவிந்தராஜ் (60), மற்றொரு காளி (50), ரவி (40), வடிவேல் (50), ராம் மகன்

காளி (56), மணி (52), சென்னம்மாள் (38), நந்திகேசவன் (48), மாரியம்மாள் (38), விஜயராகவன் (10), நிலா (52), முருகேசன் (45), சக்தி (30), அன்பழகன் (86), குப்பன் (55) 5 பெண்கள் உள்ளிட்ட 22 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில் மேல் சிகிச்சைக்காக குப்பன், மணி, காளி ஆகியோா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குா் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனா்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT