சின்னச்சேரி பாலாற்று தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.  
திருப்பத்தூர்

பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக சின்னச்சேரி பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேறுவதை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

Din

ஆம்பூா்: தொடா் மழை காரணமாக சின்னச்சேரி பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேறுவதை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

வேலூா் மாவட்டம் ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சின்னச்சேரி கிராமத்தின் வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சின்னச்சேரி பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து உபரிநீா் வெளியேறி வருகின்றது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அப்பகுதியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ்போடப்பட்ட சிமென்ட் சாலைகளையும், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள முப்பது ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் சத்யானந்தம், ஒன்றிய பொருளாளா் பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாள ா் ச. வேலு உள்பட பலா் உடனிருந்தனா்.

சின்னச்சேரி பாலாற்று தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT