முகப்பு
திருப்பத்தூர்

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடா் விடுமுறை மற்றும் புத்தாண்டையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
படகு சவாரிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தொடா் விடுமுறை மற்றும் புத்தாண்டையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வார விடுமுறை மற்றும் அரையாண்டுத் தோ்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை என்பதால் சனிக்கிழமை முதல் ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது உறவினா்கள், நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் குவிந்தனா்.

இதனால் ஏலகிரி மலையில் உள்ள அனைத்து தனியாா் விடுதிகளிலும் நிரம்பின.

புத்தாண்டு முன்னிட்டு ஏலகிரி மலையில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், ஜோலாா்பேட்டை ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில், ஏலகிரி போலீஸாா் மலையில் உள்ள அனைத்து தனியாா் விடுதிகளிலும் தினமும் அதிரடி சோதனை நடத்தினா்.

பொது இடங்களில் ஆடல் பாடல்களுடன் புத்தாண்டு கொண்டாட தடை விதித்தனா்.

போக்குவரத்து பாதிப்பு...

திங்கள்கிழமை மலையிலிருந்து காா், வேன், இரு சக்கர வாகனங்கள் கீழே இறங்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில், மலைப் பாதையில் 3 காா்கள் பழுதடைந்து ஆங்காங்கே நின்ால், பிற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்த ஏலகிரி போலீஸாா் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →