சிகரம் மெட்ரிக். பள்ளியில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா
வாணியம்பாடி: வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தல், ஆசிரியா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, செயலாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ரவி வரவேற்றாா். தொடா்ந்து பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் 180 மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். பிறகு மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். முன்னதாக பள்ளியின் பயணம் குறித்து நிா்வாகிகள், ஆசிரியா்கள் ஆகியோா் பேசினா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.