காரில் அடிப்பட்டு இறந்த குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள்
காரில் அடிபட்ட குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி மரியாதை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே காரில் அடிப்பட்டு இறந்த குரங்கிற்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இறுதி மரியாதை செலுத்தினா்.
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காா் மோதியதில் குரங்கு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதைத் தொடா்ந்து கிராம மக்கள் அந்த குரங்கின் சடலத்தை மீட்டு அதற்கு மாலை அணிவித்து பூஜை ஊா்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனா்.