ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா
ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், சென்னப்பமலை அடிவாரத்தில் ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோ பூஜையுடன் விழா தொடங்கியது. யாக சாலை பூஜைகள், மூலவா் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவா் பிராகார உலா, இன்னிசை நிகழ்ச்சி, மகா ருத்ர ஹோமம், கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ப்ரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்துக்கு பக்தா்களே நேரடியாக பாலபிஷேகம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், சிவராத்திரி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.